மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கி.பாலசுப்ரமணியம், இஆப., அவர்கள் தலைமையில் மாவட்ட தேர்தல் பார்வயாளர் மற்றும் வட்டார பார்வையாளர்களுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆய்வுக்கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கி.பாலசுப்ரமணியம், இஆப., அவர்கள் தலைமையில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் திரு.வி.சிவகிருஷ்ணமூர்த்தி, இஆப, அவர்கள் முன்னிலையில் வட்டார தேர்தல் பார்வையாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான 1 மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கு சாதாரண தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இறுதி வேட்பாளர் பட்டியலின் அடிப்படையில் சின்னம் ஒதுக்கீடு செய்தல், 08.02.2022 வேட்பாளர் கூட்டம் நடத்துதல், 10.02.2022 அன்று வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி நடத்துதல், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டு வழங்குதல், வாக்குச்சாவடி சீட்டுகள் விநியோகம் செய்தல் மற்றும் வேட்பாளர்கள் பரப்புரையில் பின்பற்றப்பட வேண்டிய தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் கோவிட் - 19 நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றுதல் உள்ளிட்டவைகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சி.சக்திகணேசன்,இகாப, அவர்கள், கூடுதல் ஆட்சியர்(வருவாய்) திரு.ரஞ்ஜீத் சிங், இஆப, அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/திட்ட இயக்குநர் திரு.பவன்குமார் ஜி.கிரியப்பனவர், இஆப, அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திருமதி.மல்லிகா மற்றும் வட்டார தேர்தல் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் சுந்தரமூர்த்தி (வயது 29). சம்பவத்தன்று இவர் காணாமல் போனார். இவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது பற்றி கடந்த 16.12.21 அன்று புவனகிரி போலீசில் கொடுத்த புகாரின் பேரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சுந்தரமூர்த்தியை தேடி வந்தனர்.இந்நிலையில் 19.12.21 அன்று புவனகிரி ஓ.என்.ஜி.சி. டாஸ்மாக் கடை பின்புறம் காணாமல் போன சுந்தரமூர்த்தி உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரை அதே ஊர் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த ராஜா மகன் அய்யப்பன் (29) கொலை செய்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை பிடித்து புவனகிரி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மனைவியிடம் கள்ளக்காதல் வைத்திருந்ததால் சுந்தரமூர்த்தியை கொலை செய்ததாக அய்யப்பன் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து. கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அய்யப்பனின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் வகையில், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதையடுத்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவின்பேரில் அய்யப்பனை புவனகிரி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். அதற்கான உத்தரவு நகலை சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல்தொழில்நுட்ப அணியின் மாநில அளவிள்ஆலோசனை கூட்டம்
நேற்று மாலை கழக தலைவரும் முதல்வருமான திரு.மு.க.ஸ்டாலின் ( M. K. Stalin ) அவர்கள் தலைமையில் நடைபெற்ற திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டத்தில் மாநில செயலாளர் TRB.ராஜா ( TRB Rajaa ) மற்றும் இணை செயலாளர் DR.மகேந்திரன் ( Dr. R. Mahendran ) , கிழக்கு மண்டல பொறுப்பாளர் கேசவன் ( Kesavan Balasubramaniyan ) அவர்கள் மற்றும் துணை செயலலர்கள்
கடலூர் மேற்கு மாவட்டம் கழக சார்பாக நெய்வேலி தொமுச வளாகத்தில் நடைபெற்ற காணொலி காட்சி கூட்டத்தில் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவெ.கணேசன் அவர்கள் தலைமையில் , பண்ருட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளரும் , நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராசேந்திரன்,B.Sc,B.E,MLA,. அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் , மா.துணை, தொகுதி, சமூகவலைத்தள மற்றும் ஒன்றிய,நகர,பேரூர், பகுதி, வட்ட,ஊராட்சி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில அளவில் ஆலோசனை கூட்டம் : கழக தலைவர் மாண்புமிகு தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்புரை!
- சிலர் போல போட்டோஷாப் செய்யாமல் இருப்பதால்தான் நடுநிலையாளர்களின் நம்பிக்கையை நாம் பெற்றிருக்கிறோம். அகில இந்திய ஊடகங்கள் நம்மை பாராட்டி வருகின்றன. இதையெல்லாம் நீங்கள் மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கவேண்டும்
- மலையளவு பொய்யாக இருந்தாலும், அதை உடைக்க உண்மை ஒன்றே போதும். அதை யாரும் மறந்துவிடாதீர்கள். நீங்கள் உண்மைகளை மக்களிடம் எடுத்துச் சொன்னாலே போதும்.
- சாதியைச் சொல்லித் திட்டுவார்கள். மதத்தை வைத்துத் திட்டுவார்கள். பெண்களாக இருந்தால் ஆபாசமாகத் திட்டுவார்கள். நமது குடும்பத்தை இழிவுபடுத்துவார்கள். அதுதான் அவர்களின் பண்பாடு!
- போன்ற சிறப்புரை தமிழக முதல்வர் அவர்கள் கழக வேட்பாளர்களுக்கும் கலக்கத்தில் உள்ளவர்களுக்கும் கூறி தனது உரையை முடித்துக்கொண்டார்
கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் உள்ள அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் ஆனது 06/02/2022 அன்று காலை 7.00 முதல் 9.00 மணி அளவில் நடைபெறும். இந்தப் புகழ் பெற்ற விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் ஆனது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்டராதித்த சோழனின் மூலம் அமைக்கப்பட்டது திருக்கோயிலில் நாற்பத்தி எட்டு கல்வெட்டுகள் உள்ளன.
இந்தக்கோயில் மிக முக்கிய சிறப்பு 5 என்கிற எண்ணாகும். இந்த கோயிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது.
இந்தக்கோயிலில் உள்ள ஆழத்து விநாயகர், விநாயகரின் ஆறுபடை வீடுகளில் ஒன்று.
காசியை விட வீசம்(தமிழ் அளவை) புண்ணியம் அதிகம் என தல வரலாறு குறிப்பிடுகிறது. இதனால் விருத்தகாசி என்கிற சிறப்புப்பெயரும் இவ்வூருக்கு உண்டு.63 நாயன்மார்கள் சிலை காண்பதற்கு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அது வரலாற்றின் சிறப்பை உணர்த்துகிறது
இந்த சிவாலயம் நான்கு புறமும் சுமார் 26 அடி உயரமுள்ள மதிற்சுவரையும், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் உடைய ஒரு பெரிய கோவிலாகும். ஆலயத்தின் நான்கு புறமும் 7 நிலைகளையுடைய பெரிய கோபுரங்கள் நெடிதுயர்ந்து காணப்படுகின்றன. கிழக்கே உள்ளே பிரதான வாயில் வழியாக உள்ளே சென்றால் 16 தூண்களை உடைய மண்டபம் இருக்கிறது.
இத்தலத்தின் இறைவி பெரிய நாயகி அம்மையின் சந்நிதி ஒரு தனி கோயிலாக முதல் பிரகாரத்தின் வடபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூன்றாம பிரகாரத்தில் 63 நாயன்மார்களில் உருவச் சிலைகளும், பிந்து மாதவப் பெருமாள் சந்நிதியும் உள்ளன. 63 மூவர் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் காலபைரவர் மூர்த்தம் காசியில் இருப்பது பொன்ற வடிவமைப்புக் கொண்டது
நான்காம் பிரகாரத்தில் இத்தலத்தின் மூலவர் பழமலைநாதர் கருவறை இருக்கிறது. கருவறையின் வாயிலில் இரு புறமும் துவாரபாலகர்கள் சிலைகள் காணப்படுகின்றன. மூன்றாம் பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் பாலாம்பிகை சந்நிதி உள்ளது..
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட தி.இளமங்கலம் கிராமத்தில் அம்பேத்கர் நகரில் மழைகாலத்தின் போது ரோடுகளை வெட்டி மழை நீர் செல்வதற்கு நகராட்சி நிர்வாக அதிகாரிகள் ரோடுகளை பறித்துப் வழி செய்தனர் , இதனால் அங்கு தேங்கியிருந்த மழைநீர்கள் அனைத்தும் அவ்வழியா வெளியேற்றப்பட்டது.பிறகு மழைக்காலம் முடிந்ததும் தோண்டப்பட்ட அந்தப் வழியை சரி செய்யவில்லை என்றும் பலமுறை மனு கொடுத்தும் ரோடுகளை சரிசெய்யாமல் அலைகழித்து வருவதாகவும் ஊர் மக்கள் கூறுகின்றனர் மற்றும் இந்த வழியாக வாகனம் கூட செல்ல முடியாத அளவிற்கு மிகவும் மோசமாக இருப்பதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆகையால் அங்கு தேங்கியிருந்த மழை நீர் கழிவு நீராக மாறி அதில் டெங்கு மலேரியா போன்ற நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதாக அப்பகுதியை சுற்றி உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அச்சப்படுகிறார்கள் மற்றும் சாலையை சீர் அமைக்க கோரியும் அங்கு உள்ள கழிவுகளை அகற்ற கோரியும் மக்கள் கேட்டுக்கொண்டனர்
விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாக குப்பைமேட்டில் கட்டுக்கட்டாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்திற்குள் வாக்காளர் அடையாள அட்டைக்கான (தேர்தல் பிரிவு) பிரிவு இயங்கி வருகிறது. இங்கு பொதுமக்கள் புதிய வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் அட்டையில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இந்த அலுவலகம் எதிரே உள்ள குப்பை மேட்டில் குப்பைகள் பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்தன. மேலும் ஒரே பெயர் விலாசம் கொண்ட அடையாள அட்டைகள், அடையாள அட்டைகள் விண்ணப்பித்ததற்கான, வரிசை எண்களுடன் கூடிய ரசீதுடன் கட்டுக்கட்டாக கிடந்தன.
இதை கண்ட பொதுமக்கள் ஆச்சரியத்துடன் அதிகாரிகளின் அலட்சியத்தைக் கண்டு மனவேதனை அடைந்துள்ளனர்.