3000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட விருத்தகிரீஸ்வரர் கோவில் கோவில் மகா கும்பாபிஷேகம்

February 05, 2022 News Desk 0 Comments

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் உள்ள அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் ஆனது 06/02/2022 அன்று காலை 7.00 முதல் 9.00 மணி அளவில் நடைபெறும். 

இந்தப் புகழ் பெற்ற விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் ஆனது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்டராதித்த சோழனின் மூலம் அமைக்கப்பட்டது திருக்கோயிலில் நாற்பத்தி எட்டு கல்வெட்டுகள் உள்ளன.


இந்தக்கோயில் மிக முக்கிய சிறப்பு 5 என்கிற எண்ணாகும். இந்த கோயிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது.

இந்தக்கோயிலில் உள்ள ஆழத்து விநாயகர், விநாயகரின் ஆறுபடை வீடுகளில் ஒன்று.

காசியை விட வீசம்(தமிழ் அளவை) புண்ணியம் அதிகம் என தல வரலாறு குறிப்பிடுகிறது. இதனால் விருத்தகாசி என்கிற சிறப்புப்பெயரும் இவ்வூருக்கு உண்டு.63 நாயன்மார்கள் சிலை காண்பதற்கு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அது வரலாற்றின் சிறப்பை உணர்த்துகிறது

இந்த சிவாலயம் நான்கு புறமும் சுமார் 26 அடி உயரமுள்ள மதிற்சுவரையும், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் உடைய ஒரு பெரிய கோவிலாகும். ஆலயத்தின் நான்கு புறமும் 7 நிலைகளையுடைய பெரிய கோபுரங்கள் நெடிதுயர்ந்து காணப்படுகின்றன. கிழக்கே உள்ளே பிரதான வாயில் வழியாக உள்ளே சென்றால் 16 தூண்களை உடைய மண்டபம் இருக்கிறது.

இத்தலத்தின் இறைவி பெரிய நாயகி அம்மையின் சந்நிதி ஒரு தனி கோயிலாக முதல் பிரகாரத்தின் வடபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூன்றாம பிரகாரத்தில் 63 நாயன்மார்களில் உருவச் சிலைகளும், பிந்து மாதவப் பெருமாள் சந்நிதியும் உள்ளன. 63 மூவர் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் காலபைரவர் மூர்த்தம் காசியில் இருப்பது பொன்ற வடிவமைப்புக் கொண்டது

நான்காம் பிரகாரத்தில் இத்தலத்தின் மூலவர் பழமலைநாதர் கருவறை இருக்கிறது. கருவறையின் வாயிலில் இரு புறமும் துவாரபாலகர்கள் சிலைகள் காணப்படுகின்றன. மூன்றாம் பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் பாலாம்பிகை சந்நிதி உள்ளது..




You Might Also Like

0 $type={blogger}: