மாவட்ட தேர்தல்‌ பார்வயாளர்‌ மற்றும்‌ வட்டார பார்வையாளர்களுடன்‌ நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்‌ குறித்த ஆய்வுக்கூட்டம்‌.

February 08, 2022 News Desk 0 Comments

மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌/மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.கி.பாலசுப்ரமணியம்‌, இஆப., அவர்கள்‌ தலைமையில்‌ மாவட்ட தேர்தல்‌ பார்வயாளர்‌ மற்றும்‌ வட்டார பார்வையாளர்களுடன்‌ நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்‌ குறித்த ஆய்வுக்கூட்டம்‌ கடலூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்‌ குறித்து மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌/மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.கி.பாலசுப்ரமணியம்‌, இஆப., அவர்கள்‌ தலைமையில்‌ மாவட்ட தேர்தல்‌ பார்வையாளர்‌ திரு.வி.சிவகிருஷ்ணமூர்த்தி, இஆப, அவர்கள் முன்னிலையில்‌ வட்டார தேர்தல்‌ பார்வையாளர்களுடன்‌ ஆய்வுக்கூட்டம்‌ நடைபெற்றது.

கடலூர்‌ மாவட்டத்தில்‌ நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான 1 மாநகராட்சி, 6 நகராட்சிகள்‌, 14 பேரூராட்சிகளுக்கு சாதாரண தேர்தல்‌ நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள்‌மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இறுதி வேட்பாளர்‌ பட்டியலின்‌ அடிப்படையில்‌ சின்னம்‌ ஒதுக்கீடு செய்தல்‌, 08.02.2022 வேட்பாளர்‌ கூட்டம்‌ நடத்துதல்‌, 10.02.2022 அன்று வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி நடத்துதல்‌, தேர்தல்‌ பணியில்‌ ஈடுபடும்‌ அலுவலர்களுக்கு அஞ்சல்‌ வாக்குச்சீட்டு வழங்குதல்‌, வாக்குச்சாவடி சீட்டுகள்‌ விநியோகம்‌ செய்தல்‌ மற்றும்‌ வேட்பாளர்கள்‌ பரப்புரையில்‌ பின்பற்றப்பட வேண்டிய தேர்தல்‌ நடத்தை விதிகள்‌ மற்றும்‌ கோவிட்‌ - 19 நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ பின்பற்றுதல்‌ உள்ளிட்டவைகள்‌ குறித்து அலுவலர்களுக்கு அறிவறுத்தப்பட்டது.


இக்கூட்டத்தில்‌ மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ திரு.சி.சக்திகணேசன்‌,இகாப, அவர்கள்‌, கூடுதல்‌ ஆட்சியர்‌(வருவாய்‌) திரு.ரஞ்ஜீத்‌ சிங்‌, இஆப, அவர்கள்‌, கூடுதல்‌ ஆட்சியர்‌ (வளர்ச்சி)/திட்ட இயக்குநர்‌ திரு.பவன்குமார்‌ ஜி.கிரியப்பனவர்‌, இஆப, அவர்கள்‌, மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌ (வளர்ச்சி) திருமதி.மல்லிகா மற்றும்‌ வட்டார தேர்தல்‌ பார்வையாளர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

You Might Also Like

0 $type={blogger}: