முந்திரி தோப்பில் முற்றிலும் எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மருங்கூர் கிராம எல்லையில் அடையாளம் தெரியாத 35 வயதுள்ள ஆண் பிணம் மருங்கூர் தோப்புக்கொல்லை சேர்ந்த தட்சிணாமூர்த்தி அவரது முந்திரி தோப்பில் முற்றும் எரிந்த நிலையில் காணப்பட்டுள்ளது, சம்பவ இடத்திற்கு முத்தாண்டிக்குப்பம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காடாம்புலியூர் ஆய்வாளர் திரு. ராஜ தாமர பாண்டியன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்து எரிந்த 35 வயதுள்ள ஆண் பிணத்தை சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் வரவைத்து மோப்ப நாய் மற்றும் தடவியல் ஆய்வாளர் மற்றும் டவர் லொகேஷன் ஆய்வாளர்கள் அனைவரையும் வரவேற்று எரிந்த நிலையில் உள்ள ஆண் பிணத்தை ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது யாராவது தங்களுடைய ஊரில் காணாமல் போயிருந்தால் முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
0 $type={blogger}: