உள்ளாட்சி தேர்தல்; திமுக தொண்டர்கள் அதிர்ப்பதி.

February 03, 2022 News Desk 1 Comments

கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் தி.இளமங்கலம் வார்டு திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் ஆவேசம், பல வருடங்களாக கட்சிகாக உழைத்து வரும் தங்களுக்கு இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காமல், வேறு பகுதியை சேர்ந்தவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது என திமுக தொண்டர்கள் கட்சியின் மீது கோபமாக உள்ளனர்.

இது குறித்த அந்த பகுதியை சார்ந்த திமுக நிர்வாகி கூறுகையில், "நான் கடந்த 10 வருடமாக திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் பயணித்து வருகிறேன், மேலும் கட்சியின் பல்வறு நிகழ்வுகளிலும் தொடர்ந்து பணியாற்றிவருகிறேன், நடைபெறவுள்ள நகர உள்ளாட்சி தேர்தலில் தி. இளமங்கலம் வார்டில் போட்டியிட விண்ணப்பித்திருந்தேன், எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, வேறு பகுதியை சார்ந்த ஜோதிமணி என்பவருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

இது இதனை ஆண்டுகள் கட்சிக்காக உழைத்தவர்களை கோபம் கொள்ள செய்துள்ளது, தொகுதிக்கு தொடர்பில்லாதவரை நிற்கவைத்ததை எங்களால் ஏற்க முடியாது என அவர் தெரிவித்தார்.



You Might Also Like

1 comment: