சாலையை சீர்அமைக்ககோரியும் பயனில்லை நகராட்சி நிர்வாகிகள் அலட்சியம். டெங்கு மற்றும் மலேரியா ஏற்பட வாய்ப்பு

February 05, 2022 News Desk 0 Comments

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட தி.இளமங்கலம் கிராமத்தில் அம்பேத்கர் நகரில் மழைகாலத்தின் போது ரோடுகளை வெட்டி மழை நீர் செல்வதற்கு நகராட்சி நிர்வாக அதிகாரிகள் ரோடுகளை பறித்துப் வழி செய்தனர் , இதனால் அங்கு தேங்கியிருந்த மழைநீர்கள் அனைத்தும் அவ்வழியா  வெளியேற்றப்பட்டது.பிறகு மழைக்காலம் முடிந்ததும் தோண்டப்பட்ட அந்தப் வழியை சரி செய்யவில்லை என்றும் பலமுறை  மனு கொடுத்தும் ரோடுகளை சரிசெய்யாமல் அலைகழித்து வருவதாகவும்  ஊர் மக்கள் கூறுகின்றனர் மற்றும் இந்த வழியாக வாகனம் கூட செல்ல முடியாத அளவிற்கு மிகவும் மோசமாக இருப்பதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
 

ஆகையால் அங்கு தேங்கியிருந்த மழை நீர் கழிவு நீராக மாறி அதில் டெங்கு மலேரியா போன்ற நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதாக அப்பகுதியை சுற்றி உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அச்சப்படுகிறார்கள் மற்றும் சாலையை சீர் அமைக்க கோரியும் அங்கு உள்ள கழிவுகளை அகற்ற கோரியும் மக்கள் கேட்டுக்கொண்டனர்




You Might Also Like

0 $type={blogger}: