திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில அளவில் காணொளி ஆலோசனை கூட்டம் !

February 06, 2022 News Desk 0 Comments

  
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல்தொழில்நுட்ப அணியின் மாநில அளவிள்ஆலோசனை கூட்டம்   
நேற்று மாலை கழக தலைவரும் முதல்வருமான திரு.மு.க.ஸ்டாலின் ( M. K. Stalin )  அவர்கள்  தலைமையில் நடைபெற்ற திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டத்தில்  மாநில செயலாளர் TRB.ராஜா ( TRB Rajaa )   மற்றும் இணை செயலாளர் DR.மகேந்திரன் ( Dr. R. Mahendran ) , கிழக்கு மண்டல பொறுப்பாளர் கேசவன் ( Kesavan Balasubramaniyan  ) அவர்கள் மற்றும் துணை செயலலர்கள் 

கடலூர் மேற்கு மாவட்டம் கழக சார்பாக நெய்வேலி தொமுச வளாகத்தில் நடைபெற்ற காணொலி காட்சி கூட்டத்தில் கடலூர் மேற்கு  மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு  தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவெ.கணேசன் அவர்கள் தலைமையில் , பண்ருட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளரும் , நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் 

சபா.இராசேந்திரன்,B.Sc,B.E,MLA,. அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் , மா.துணை, தொகுதி, சமூகவலைத்தள மற்றும் ஒன்றிய,நகர,பேரூர், பகுதி, வட்ட,ஊராட்சி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.



தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில அளவில் ஆலோசனை கூட்டம் : கழக தலைவர் மாண்புமிகு தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்புரை!


  1. சிலர் போல போட்டோஷாப் செய்யாமல் இருப்பதால்தான் நடுநிலையாளர்களின் நம்பிக்கையை நாம் பெற்றிருக்கிறோம். அகில இந்திய ஊடகங்கள் நம்மை பாராட்டி வருகின்றன. இதையெல்லாம் நீங்கள் மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கவேண்டும் 
  2. மலையளவு பொய்யாக இருந்தாலும், அதை உடைக்க உண்மை ஒன்றே போதும். அதை யாரும் மறந்துவிடாதீர்கள். நீங்கள் உண்மைகளை மக்களிடம் எடுத்துச் சொன்னாலே போதும். 
  3. சாதியைச் சொல்லித் திட்டுவார்கள். மதத்தை வைத்துத் திட்டுவார்கள். பெண்களாக இருந்தால் ஆபாசமாகத் திட்டுவார்கள். நமது குடும்பத்தை இழிவுபடுத்துவார்கள். அதுதான் அவர்களின் பண்பாடு!
  4. போன்ற சிறப்புரை தமிழக முதல்வர் அவர்கள் கழக வேட்பாளர்களுக்கும் கலக்கத்தில் உள்ளவர்களுக்கும் கூறி தனது உரையை முடித்துக்கொண்டார்


You Might Also Like

0 $type={blogger}: