திமுக எம்.எல்.ஏ நேரில் சந்தித்து ஆறுதல்..

February 04, 2022 News Desk 0 Comments

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்ட மன்ற தொகுதி தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை 27/01/2022 அன்று மாம்பட்டு அருகே பேருந்து மோதி சாலை விபத்தில் மாம்பட்டு ராஜமாணிக்கம் என்பவர் மரணம் அடைந்தார். அவரது மனைவி மலர் மற்றும் மகள் கவிதா ஆகியோர் பெரும் பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மலரின் காலில் பேருந்து சக்கரம் ஏறியதால் துண்டிக்கப்பட்ட நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.


அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் 13 வயதான கவிதா இடதுகையில் பேருந்து சக்கரம் ஏறி முழுவதும் பாதிக்கப்பட்டு கை துண்டிக்கப்பட்ட நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்

You Might Also Like

0 $type={blogger}: