குப்பையில் எரிந்த நிலையில் கிடந்த வாக்காளர் அடையாள அட்டைகள்..

February 05, 2022 News Desk 0 Comments

விருத்தாசலம்  தாலுகா அலுவலக வளாக குப்பைமேட்டில் கட்டுக்கட்டாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்திற்குள் வாக்காளர் அடையாள அட்டைக்கான (தேர்தல் பிரிவு) பிரிவு இயங்கி வருகிறது. இங்கு பொதுமக்கள் புதிய வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் அட்டையில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இந்த அலுவலகம் எதிரே உள்ள குப்பை மேட்டில் குப்பைகள் பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்தன. மேலும் ஒரே பெயர் விலாசம் கொண்ட அடையாள அட்டைகள், அடையாள அட்டைகள் விண்ணப்பித்ததற்கான, வரிசை எண்களுடன் கூடிய ரசீதுடன் கட்டுக்கட்டாக கிடந்தன.

இதை கண்ட பொதுமக்கள் ஆச்சரியத்துடன் அதிகாரிகளின் அலட்சியத்தைக் கண்டு மனவேதனை அடைந்துள்ளனர்.


You Might Also Like

0 $type={blogger}: